தமிழக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; நிதி அமைச்சரானார் செங்கோட்டையன்
சென்னை: தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய இலாகாக்களை முதல்வர் Vijay தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார்.
அதன்படி, முதல்வர் விஜய் பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், போலீஸ், உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், முதியோர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட துறைகளை கவனிக்கிறார்.
N. Anandக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் பாசன திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியை சேர்ந்த இவர், தொடக்கத்தில் காங்கிரசில் இருந்தவர். பின்னர் விஜய் ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டார். 2006ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். தற்போது தவெக பொதுச்செயலாளராக உள்ளார்.
Aadhavக்கு பொதுப்பணி துறை, கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். அரசியல் தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர். மேலும் தேர்தல் உத்தி அமைக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
Arunrajக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், மருத்துவ பட்டம் பெற்றவர். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்துள்ளார்.
K. A. Sengottaiyanக்கு நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் காலம் முதல் அரசியலில் உள்ள இவர், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் கருத்து வேறுபாட்டால் தவெகவில் இணைந்தார்.
Venkataramananக்கு உணவுத்துறை, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், ஆடிட்டராக பணியாற்றியவர். பி.ஏ., எம்.காம்., எல்.எல்.பி., எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றுள்ளார்.
Nirmal Kumarக்கு மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், லஞ்ச ஒழிப்பு, சட்டசபை, கவர்னர் மாளிகை, தேர்தல் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டியை சேர்ந்த இவர் பிஇ, எல்.எல்.பி., எம்.ஏ. பட்டங்கள் பெற்றுள்ளார்.
Rajmohanக்கு தொல்லியல் துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் கலாசாரம், செய்தி மற்றும் விளம்பரம், பிலிம் தொழில்நுட்பம், செய்தித்தாள் கட்டுப்பாடு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் வணிக மேலாண்மை மற்றும் இதழியல் துறைகளில் படித்துள்ளார்.
T. K. Prabhuக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவரான இவர் காரைக்குடியில் மருத்துவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthanaக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மிகவும் இளம்வயது அமைச்சரான இவர், கணிதத்தில் இளங்கலை மற்றும் புள்ளியியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என கூறப்படுகிறது.
