சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப 19 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கும், அவர்களை இடமாற்றம் செய்வதற்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக கொலீஜியம் செயல்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இந்த அமைப்பில் மூத்த நீதிபதிகள் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையாக 19 பேரின் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொலீஜியம் பரிந்துரைத்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்:
இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய பின், அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
