விக்டோரியா: சீசெல்ஸ் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு, விக்டோரியா நகரில் தமிழர்கள் கட்டியுள்ள நவசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அனைத்து தெய்வங்களையும் பிரதமர் மோடி தரிசித்து வழிபட்டார். பின்னர், கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
