சென்னை: தாம்பரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் Seeman பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பேசினார்.
அவர் பேச்சில், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தி, முழுமையாக இலவசமாக வழங்குவேன் என உறுதியளித்தார். அரசு மருத்துவமனைகளையே மேம்படுத்தி, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான தரத்தை வழங்குவோம் என்றும் கூறினார்.
மேலும், தண்ணீர் விற்பனையைத் தடை செய்து, மக்கள் வீடுகளுக்கு நேரடியாக தூய்மையான குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்து தொடர்பாக, இலவச பயண திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் ஏர் கண்டிஷன் வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படும் என்றும், மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பதிலாக தரமான சாலை மற்றும் சேவைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய மூன்று துறைகள் இலவசமாக வழங்கப்படும் முக்கிய சேவைகளாக இருக்கும் எனவும் சீமான் கூறினார்.
