புதுடெல்லி: லோக்சபாவில் நடைபெற்ற மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi பேச்சு கவனத்தை ஈர்த்தது.
விவாதத்தின் போது, பிரதமர் Narendra Modi குறித்து அவர் கூறிய ஒரு குறிப்பால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய ராகுல், இந்த மசோதா உண்மையான மகளிர் இடஒதுக்கீட்டை வழங்காது என்றும், தேர்தல் வரைபடத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
மேலும், ஒபிசி மற்றும் பிற சமூக பிரிவுகளுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடும் எனக் கூறி, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் சம உரிமை குறித்து கேள்விகள் எழுப்பினார்.
தென் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என உறுதி அளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், மசோதாக்கள் அரசியல் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகவும், அவை நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்களுக்கு பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கோஷங்கள் எழுந்ததுடன், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
