சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி ஆன்லைன் மூலம் உரையாட உள்ளார்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுடன் “எனது பூத் வலிமையான பூத்” என்ற நிகழ்ச்சி வாயிலாக இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.
முன்னதாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் பொறுப்பான நிர்வாகிகள், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தொண்டர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், “நமோ” செயலி மூலம் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்ட தொண்டர்களுக்கு மட்டும் பிரதமருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
