சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும், ஆலோசனை இல்லாமல் ஏற்க முடியாது என தமிழக முதல்வர் M. K. Stalin தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
2001ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் Atal Bihari Vajpayee, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்தது போல, தற்போதைய பிரதமர் Narendra Modiவும் அதேபோன்ற முடிவு எடுக்க வேண்டும் என தென் மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த கூட்டத்தொடரை ஏப்ரல் 29க்கு பின் நடத்த வேண்டும் என கூறியிருந்தும், அந்த கருத்தை புறக்கணிப்பதன் பின்னணி என்ன எனவும் சந்தேகம் தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தாமல், முக்கிய அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.
எங்கள் அனுமதியின்றி, எங்களுடன் கலந்தாலோசிக்காமல் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்க முடியாது; உயிரே போனாலும் உடன்பட மாட்டோம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த நடவடிக்கை இந்தியா சர்வாதிகார நோக்கில் செல்கிறது என்ற அச்சத்தை எழுப்புகிறது என்றும், தென் மாநிலங்களை பாதிக்கும் எந்த முடிவும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
