நாகர்கோவில்: தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் Narendra Modi ஏப்ரல் 15 அன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
பா.ஜ. மாநில தலைவர் Nainar Nagendran நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், பிரதமர் மோடியின் ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமாகும் என்றும், விரைவில் K. Annamalai தலைமையில் பிரசாரம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசை விமர்சித்த அவர், பா.ஜ.வை பார்த்தாலே அச்சம் இருப்பதாகவும், NDA ஆட்சி அமைந்தால் ஊழல்கள் வெளிப்படும் என்ற பயம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
