உதயநிதி பேச்சை விஜய் கண்டித்திருக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
கோவை: சனாதனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin பேசிய கருத்தை நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான Vijay கண்டித்திருக்க வேண்டும் என்று ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் Arjun Sampath தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சட்டசபையில் பேசிய உதயநிதி, “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், உதயநிதிக்கு நல்ல புத்தி வழங்க வேண்டும் எனக் கோரி, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சங்க தமிழர்கள் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றினர். சனாதனம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதே சனாதனத்தின் அடிப்படை. அந்த கொள்கையை அண்ணாதுரை கூட ஏற்றிருந்தார். துர்கா ஸ்டாலினும் சனாதன கொள்கையை பின்பற்றுகிறார். ஆனால் உதயநிதி தொடர்ந்து ஹிந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார்” என்று கூறினார்.
மேலும், “கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதங்களில் ஜாதி பிரிவினை இல்லையா? அதை ஒழிப்பேன் என்று உதயநிதி கூற முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
அதோடு, “அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிற முதல்வர் விஜய், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி வருகின்றனர். அவர்கள் வன்மத்துடன் செயல்படுகின்றனர். அதற்கு விஜய் பலியாகக் கூடாது. இதை தமிழ் மண் மன்னிக்காது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
