MS Dhoni ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Indian Premier League தொடரின் 19வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், Royal Challengers Bengaluru அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு பல அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் Chennai Super Kings அணியின் நட்சத்திர வீரருமான தோனி, இன்றுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக நடப்பு சீசனில் இதுவரை ஒரு போட்டியிலும் தோனி விளையாடவில்லை.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி Sunrisers Hyderabad அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாகவும், இதுவே அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அல்லது தோனி தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
