டெஹ்ரான்: இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி பயணம் தொடங்கியது.
அந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே சென்றபோது அதற்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து கப்பலில் இருந்த 20 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாகவும், 3 பேரை காணவில்லை என்றும் தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
