அக். 29-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையில், வரும் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
