வாக்காளர் பட்டியலை சீர்படுத்துவதே எஸ்ஐஆரின் நோக்கம்: தலைமை தேர்தல் கமிஷனர்
Gyanesh Kumar, “காலமானவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் வாக்காளர் பதிவுகள் வைத்துள்ளவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலை சீர்படுத்துவதே எஸ்ஐஆர் பணியின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் Election Commission of India சார்பில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் இரண்டு கட்ட பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், Uttarakhand மாநிலத்தின் Dehradun அருகே உள்ள பீஜாபூரில் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“காலமானவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டு இடங்களில் வாக்காளர் பதிவுகளை வைத்துள்ளவர்களை கண்டறிவது மிகவும் அவசியமானது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்படும்,” என்றார்.
மேலும், “வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை வழங்க வேண்டும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி P. V. R. C. Purushotham, “மாநிலம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகளுக்கான முந்தைய கட்ட ஆய்வில் சுமார் 89 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கணக்கெடுப்பு படிவங்களை அச்சிடும் ஆயத்தப் பணிகளும் முடிவடைந்துள்ளன,” என்று தெரிவித்தார்.
