புதுடில்லி: யூடியூப் சமூக ஊடகத்தில் 3 கோடி சந்தாதாரர்களை பெற்று, உலக அரசியல் தலைவர்களில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட தலைவராக பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
தனது வெளிநாட்டு பயணங்கள், உலக தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு நிகழ்ச்சிகள், வாழ்த்து செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், யூடியூபில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார். அவரது யூடியூப் சேனலை தற்போது 3 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சேனலை சுமார் 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
அடுத்து பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 15 லட்சம் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 14 லட்சம் பேருடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் சால்வடோர் அரசியல்வாதி நயிப் புகேலே ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆறாவது இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஏழாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட தலைவராக பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை சுமார் 4.30 கோடி பேர் பின்தொடர்கின்றனர்
