தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் Kamal Haasan தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் திருச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இணைந்ததற்கான காரணத்தை வெளிப்படையாக விளக்கியுள்ளார்.
“ஒரு உண்மையான தலைவர் என்றால், மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே அவர்களிடம் சென்று நிற்க வேண்டும்; ஓடி ஒளிவது கூடாது” என்று அவர் கூறினார்.
மேலும், “நான் முன்பு கூறிய ஒரு யோசனையை தற்போது திமுக செயல்படுத்தியுள்ளது. நாட்டில் வேறு யாரும் முன்வைக்காத திட்டம் அது – மகளிர் உரிமைத் தொகை திட்டம்” என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டம் நல்ல யோசனை என்றும், அது எங்கு இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை அரசியலில் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய அணுகுமுறையாலேயே பல கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியாக உருவாக்க முடிந்துள்ளதாகவும், அந்த பெருந்தன்மையை பார்த்தே திமுக கூட்டணியில் இணைவது குறித்து முடிவு செய்ததாகவும் Kamal Haasan கூறினார்.
