திருப்பூர்: புதிய அரசாக இருப்பதால் மக்கள் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் Arunraj மற்றும் Sengottaiyan தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத் துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி மற்றும் நேர்மையான செயல்பாடுகளே முதல்வர் Vijay தலைமையிலான அரசின் முக்கிய நோக்கங்கள் எனக் கூறினர்.
ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்களே ஆன நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளதாகவும், முந்தைய ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடும்போது அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் மாற்றத்தை மக்கள் விரைவில் நேரடியாக காண்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
முதல்வர் விஜய் தினமும் காலை 10 மணிக்கே தலைமைச் செயலகம் வந்து பணியை தொடங்குவதாகவும், மதிய உணவு இடைவேளையிலும் அலுவலகத்தை விட்டு செல்லாமல் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு பணிகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
திருப்பூர் சாய ஆலைகளில் தேங்கியுள்ள கலவை உப்பு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாகவும், சாய ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர். விரைவில் கழிவுகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதேபோல், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வருவாய்த் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
