பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் அர்லேகர் சந்திப்பு!
புதுடில்லி: தமிழகத்தின் முழுநேர கவர்னராக அர்லேகர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து டில்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் அர்லேகர் சந்தித்துப் பேசினார்.
தமிழக வளர்ச்சி குறித்து ஆலோசனை
இந்தச் சந்திப்பு தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியை கவர்னர் அர்லேகர் சந்தித்தபோது, தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
தமக்கு அன்பான வரவேற்பு அளித்து கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு கவர்னர் அர்லேகர் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
