தமிழகத்தில் நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முக்கிய துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சுன்சோனுகம் ஜடக் சிரு நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செல்வராஜ் பொதுப்பணித்துறை செயலாளராகவும், சந்திப் நந்தூரி இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமா மகேஸ்வரி கைத்தறித்துறை இயக்குநராகவும், பிரதீப் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும், அழகு மீனா மருத்துவ சேவை பணியாளர் வாரியத் தலைவராகவும், சுரேஷ் குமார் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சித்ரா விஜயன் சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (துணை கமிஷனர்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
