புதுடில்லி: இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் Leander Paes, மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு Bharatiya Janata Partyவில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் மத்திய அமைச்சர் Kiren Rijiju முன்னிலையில் லியாண்டர் பயஸ் கட்சியில் இணைந்தார். மத்திய இணை அமைச்சர் Sukanta Majumdar அவரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கிரண் ரிஜிஜு, “லியாண்டர் பயஸுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். விளையாட்டு துறையில் பிரதமர் Narendra Modi மேற்கொண்ட முயற்சிகளால் ஈர்க்கப்பட்டு அவர் பாஜவில் இணைந்துள்ளார்,” என்றார்.
பின்னர் லியாண்டர் பயஸ் கூறியதாவது: “நான் 40 ஆண்டுகளாக நாட்டிற்காக விளையாடியுள்ளேன். இனி மக்களுக்கும், இளைஞர்களுக்கும் சேவை செய்ய விரும்புகிறேன். ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘டாப்ஸ்’ போன்ற திட்டங்கள் விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக உள்ளன. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க விரும்புகிறேன்,” என்றார்.
முன்னதாக, 2021ல் All India Trinamool Congress கட்சியில் இணைந்த அவர், 2022 கோவா சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்திருந்தார். பின்னர் கட்சிப் பணிகளில் அதிகமாக ஈடுபடாமல் இருந்த நிலையில், சமீபத்தில் பாஜ தேசிய தலைவர் J. P. Naddaவை சந்தித்ததைத் தொடர்ந்து பாஜவில் இணைந்துள்ளார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் லியாண்டர் பயஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
