சென்னை: “குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில், திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு பட்டியலை மத்திய அமைச்சர் Piyush Goyal வெளியிட்டார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை வெளியிட்டு பேசிய அவர், “தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக இந்த தேர்தல் அமையும். இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழகம் இதற்கு முன் சந்தித்ததில்லை. முதல்வர் M. K. Stalin, துணை முதல்வர் Udhayanidhi Stalin, எம்பி Kanimozhi Karunanidhi உள்ளிட்டோர் குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார்கள்,” என்றார்.
மேலும், “தமிழகம் வளர்ச்சிக்கான பெரிய சாத்தியங்கள் கொண்ட மாநிலம். ஆனால் தற்போதைய ஆட்சி அதன் முன்னேற்றத்தை பாதித்துள்ளது. Edappadi K. Palaniswami தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சியை வழங்கும்,” எனக் கூறினார்.
திமுக ஆட்சியை குற்றம் சாட்டிய அவர், “இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் உறுதியான ஆதாரங்களால் நிரூபிக்கப்படக்கூடியவை. திமுக மற்றும் காங்கிரஸ் இதனை மறுக்க முடியாது,” என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அவர் கூறியதாவது: “கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2022ல் 4,968 ஆக இருந்த போக்சோ வழக்குகள் 2024ல் 6,969 ஆக உயர்ந்துள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “திமுக நிர்வாகிகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றும் குற்றம்சாட்டினார்.
ஊழல் தொடர்பாக, “சட்டவிரோத மணல் கடத்தல் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் தொடர்பாகவும் பெரிய அளவிலான முறைகேடுகள் உள்ளன. நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள், கனிம வளங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது,” என்றார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் கூறியதாவது: “கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கொலைகள் நடந்துள்ளன. காவல் நிலைய மரணங்கள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் கூட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,” என விமர்சித்தார்.
மேலும், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. எரிவாயு மானியம், எரிபொருள் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து, வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை,” என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் குறித்தும் அவர் கூறியதாவது: “போதையில்லா தமிழகம் என்ற முழக்கத்துடன் வந்த அரசு, போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ல் 6,852 இருந்த வழக்குகள் 2022ல் 10,385 ஆக உயர்ந்துள்ளன,” எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு பியூஷ் கோயல் தனது பேச்சில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
