சன்னை: தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கட்சியினர் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தபால் நிலையம் முன்பாக காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
சிவகங்கை, கும்பகோணம், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் ஆதரவாக பங்கேற்றனர்.
