பெங்களூரு: கர்நாடக முதல்வராக இருந்த Siddaramaiah, காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின்படி கடந்த மே 28-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
விதான் சவுதாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் K. C. Venugopal, மேலிட பொறுப்பாளர் Randeep Singh Surjewala உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது, புதிய சட்டசபை காங்கிரஸ் தலைவராக D. K. Shivakumar பெயரை சித்தராமையா முன்மொழிந்தார். அதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்ததால், டி.கே.சிவகுமார் ஒருமனதாக சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் லோக் பவனில் ஆளுநர் Thaawarchand Gehlot-ஐ சந்தித்து, சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார். மேலும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியும் மனு அளித்தார்.
இதையடுத்து, ஜூன் 3-ம் தேதி கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க உள்ளார். அதே நாளில் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
