‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ரூ.7 லட்சம் கோடி சேமிப்பு: பார்லி., கூட்டுக்குழு தகவல்
நாடு முழுவதும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய Bharatiya Janata Party அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டம் தொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2024 டிசம்பரில் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. P. P. Chaudhary தலைமையிலான 41 உறுப்பினர்கள் கொண்ட குழு, பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், Gujarat மாநிலத்தின் காந்திநகரில் மாநில தலைமைச் செயலர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டுக்குழு ஆலோசனை நடத்தியது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.பி.சவுத்ரி, “விரிவான அறிக்கையை தயாரிக்கும்படி குஜராத் அரசிடம் கேட்டுள்ளோம். இது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால், நாடு சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும். மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் வரை அதிகரிக்கும்,” என்றார்.
மேலும், “சேமிக்கப்படும் நிதியை உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயன்படுத்த முடியும். இந்த விவகாரம் குறித்து கூட்டுக்குழு விரிவாக ஆய்வு செய்து வருகிறது. குழு உறுப்பினர்கள் அரசியலை தாண்டி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என நம்புகிறோம்,” என்றும் தெரிவித்தார்.
