ஜெருசலேம்: “ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் தற்போது முன்பை விட அதிக வலிமையுடன் செயல்பட்டு வருகிறது.
ஈரானில் புரட்சிகர பாதுகாப்புப் படையினரும் பாசிஜ் படையினரும் இருக்கும் பகுதிகளில் தெருக்களிலும் சோதனைச் சாவடிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரான் மக்கள் சுதந்திரத்தை நோக்கிய புதிய பாதையில் முன்னேறுவதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் நிற்கிறது. உதவியும் வழங்கப்படும்.
ஆனால் இறுதியாக முடிவெடுப்பது ஈரான் மக்களின் கைகளில்தான் உள்ளது.
அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
நாங்கள் தினமும் பேசி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டு இணைந்து முடிவுகளை எடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
