சென்னை: நாட்டின் இழந்த பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அர்லேக்கர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு திரும்பியுள்ள சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த செப்பேடுகள் வெறும் தொல்பொருட்கள் அல்ல. தமிழர்களின் செழுமையான பண்பாட்டு மரபு, சிறந்த நிர்வாகத் திறன், அறிவியல் முன்னேற்றம் மற்றும் மத நல்லிணக்க உணர்வின் உயிர்ப்புமிக்க சான்றுகளாக அவை திகழ்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை அமைப்பதற்காக மாமன்னர் ராஜராஜ சோழன் வழங்கிய காணிக்கை, இந்தியாவின் நீண்டகால நாகரிக மரபை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இழந்த பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கவர்னர், இந்த அரிய பொருட்களை மீட்டெடுக்க பங்களித்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வரலாற்றுச் சாதனை தமிழகம் மட்டுமின்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இளைய தலைமுறையினர் இந்தியாவின் செழுமையான நாகரிக பாரம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும்” என்றும் தமிழக கவர்னர் அர்லேக்கர் தெரிவித்துள்ளா
