இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அங்குருவடோட்டா பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் அங்கு தங்கியிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
