நியூயார்க்: போரில் நேரடியாக பங்கேற்காத அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை Iran உடனடியாக நிறுத்த வேண்டும் என United Nations வலியுறுத்தியுள்ளது.
மேற்காசியாவில், United States மற்றும் Israel இணைந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு நிலை உருவாகியுள்ளது.
இந்த மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் Donald Trump 5 நாட்கள் தாக்குதலை நிறுத்தும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இருப்பினும், இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், இந்த போருக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத கால போர் நிறுத்தம் உள்ளிட்ட 15 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில், Antonio Guterres சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய கிழக்கில் நிலவும் மோதல் எல்லைகளை கடந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இது சரியான தருணம். ஈரான், இந்த மோதலில் நேரடியாக பங்கேற்காத அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
