புதுடெல்லி: நைஜீரியாவின் லாகோஸில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்ருதி ஜோஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
லாகோஸில் நடைபெற்ற மகளிர் அணி சேபர் பிரிவில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. தங்கம் வென்ற இந்திய அணியில் ஸ்ருதி ஜோஷியும் இடம்பெற்றிருந்தார்.
ஸ்ருதி ஜோஷி தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப்-ல் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக இதே காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியின் மகளிர் தனிநபர் சேபர் பிரிவிலும் ஸ்ருதி ஜோஷி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதன் மூலம் நடப்பு போட்டியில் ஸ்ருதி ஜோஷி தங்கம் மற்றும் வெண்கலம் என மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
அவரது சாதனைக்கு சிஐஎஸ்எஃப் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
