சென்னை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
19 இடங்களில் சோதனை
சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.
திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அரசு டெண்டர் வசூல் தொடர்பாக சோதனை?
அரசு டெண்டர்களில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் சட்டவிரோதமாக வசூல் நடைபெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
