புதுடெல்லி:
இந்தியா, கடல் அடியில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே–4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அணுசக்தியால் இயங்கும் ஐ.என்.எஸ். அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட கே–4 ஏவுகணை, விசாகப்பட்டினம் கடற்கரை அருகே நடைபெற்ற சோதனையில் தனது துல்லியத்தையும் செயல்திறனையும் நிரூபித்துள்ளது.
நீருக்கடியில் இருந்து அணு ஆயுதங்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, இந்திய கடற்படையின் மூலோபாய சக்தியை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என கூறப்படுகிறது. இந்த சோதனை வெற்றியின் மூலம், நிலம், வான் மற்றும் கடல் என மூன்று தளங்களிலிருந்தும் அணு தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உறுதியாக இடம்பிடித்துள்ளது.
