தவெக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த செந்தில் நாதன், கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் கூட்டப்பள்ளி பகுதியில், மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குள் செந்தில் நாதன் அத்துமீறி நுழைந்து, கதவை உள்ளிருந்து பூட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அந்த பெண் நிர்வாகியின் உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டிற்குள் அந்த பெண்ணுடன் செந்தில் நாதன் இருப்பதை பார்த்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கட்சி நடவடிக்கையாக செந்தில் நாதனை தவெக கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
