புதுடில்லி:
பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நேற்று நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று டில்லி வந்த நிதின் நபின், பாஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தலைமையகத்தில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய செயல் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நிதின் நபினுக்கு மலர்க் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
