எல். முருகன் விலகிய ராஜ்யசபா இடத்தில் ஹர்தீப் சிங் புரி போட்டி
புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் எல். முருகன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். இதனால் அவர் வகித்து வந்த ராஜ்யசபா இடம் காலியானது.
இந்த இடத்திற்கான தேர்தலில் ஹர்தீப் சிங் புரி போட்டியிடுவார் என்று பாஜக தற்போது அறிவித்துள்ளது.
