இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நெதன்யாகு அழைப்பு
இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு வருகை தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது, இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் தீபம் ஏற்றுவதற்காகப் பிரதமர் மோடியையும், இந்திய விமானி ஸ்மிட் மச்சாரையும் அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வானிலும் நிலத்திலும் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உறவை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
