இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய முதல்வர் விஜய்: அமைச்சர்களுடன் உற்சாக சந்திப்பு
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 18 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெக தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அமைச்சர்களுடன் இணைந்து முதல்வர் விஜய் தனது பாணியில் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
