உலக கவனத்தை ஈர்த்த சுமித் மச்சார்
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற Flydubai விமானத்தில் ஏற்பட்ட தாக்குதலின்போது பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார், தற்போது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
174 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இருந்த விமானத்தில், துணை விமானியால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையிலும் சுமித் மச்சார் விமானத்தின் கட்டுப்பாட்டை பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் செயல்பட்டார்.
விமானம் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கம்
தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு திசை திருப்பப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உலகின் பல்வேறு முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமித் மச்சாரின் செயல்பாடு மற்றும் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டன.
சர்வதேச ஊடகங்களில் சுமித் மச்சார்
தி கார்டியன், பிபிசி, ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் (AP), நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளன.
சில ஊடகங்கள் சுமித் மச்சாரின் துணிச்சலை பாராட்டும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் விமானத்தை வேறு இடத்துக்கு திருப்பிய சம்பவம் மற்றும் பயணிகள், விமானப் பணியாளர்களின் பங்கு குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளது.
குஜராத் அரசு விருது அறிவிப்பு
இந்த நிலையில், குஜராத் பூர்வீகத்தைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சாருக்கு ‘விசிஷ்ட குஜராத் கரிமா’ விருது வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
சுமித் மச்சார் வெளிப்படுத்திய சமயோசிதமான நடவடிக்கை மற்றும் துணிச்சலை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வீரச்செயலுக்கு கிடைக்கும் கவுரவம்
விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்ட சுமித் மச்சாரின் நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது குஜராத் அரசும் அவரை மாநில விருது மூலம் கவுரவிக்க உள்ளது.
