ஹிந்து மதத்திற்கு மாறிய அமெரிக்க பெண் பக்தருக்கு கோவிலில் வழிபட அனுமதி மறுத்த அறநிலையத்துறை உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த லாரா பிரான்சிஸ் ஐயங்கார், ஹிந்து மதத்தை தழுவி, 2023-ஆம் ஆண்டு வரத பாலாஜி வெங்கடகிருஷ்ணனை காரப்பங்காடு அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்றபோது, அவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற காரணத்தால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் மட்டுமே இருக்க அனுமதி வழங்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனரின் உத்தரவை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பி. சக்கரவர்த்தி, ஒருவர் உண்மையாக ஹிந்து மதத்தை தழுவி அதன் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றினால், அவரை ஹிந்துவாக அங்கீகரிக்க மறுக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், மனுதாரருக்கு எந்த ஹிந்து பெண் பக்தருக்கும் உள்ள அனைத்து வழிபாட்டு உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
