அமெரிக்கா–ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கான முக்கிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பயணத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்களின் தகவலின்படி, இந்தியா நோக்கி பயணித்த 30 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்துள்ளன. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 26 கப்பல்கள் அந்தப் பகுதியை கடப்பதற்காக காத்திருக்கின்றன.
மார்ச் 1 முதல் ஜூன் 14 வரை தினசரி 10க்கும் குறைவான கப்பல்கள் மட்டுமே இந்த ஜலசந்தியை கடந்த நிலையில், ஜூன் 15 முதல் தினசரி சராசரியாக 22 சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்து வருகின்றன.
சமீப நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
