துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. இதையடுத்து அந்த லாரி சாலையின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அதே சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மினி பஸ், சாலையில் நின்றிருந்த லாரியை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் காயமடைந்த 9 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
