லக்னோ: மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்னர் சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் Rajnath Singh தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, நாட்டில் விழிப்புணர்வு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதை பொதுமக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.
மேலும், பிரதமராக Narendra Modi பதவியேற்பதற்கு முன்பு இருந்த இந்தியாவுக்கும் தற்போதைய இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், அந்த மாற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 8 முதல் 9 ஆண்டுகளில் மத்திய பாஜ அரசு சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக கூறிய அவர், இன்று இந்தியா தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் முன்னேறி வருவதாகவும், இதை மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
