இந்தியாவின் முன்னணி இளம் செஸ் வீரரான ஆர். பிரக்ஞானந்தா, நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம், நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த தொடரின் பத்து சுற்றுகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இதில் டி. குகேஷ், Magnus Carlsen மற்றும் Vincent Keymer உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று மொத்தம் 18 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை அவர் பதித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற ஒன்பதாவது சுற்றில், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த்தி கவனம் ஈர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
