West Bengal மாநிலத்தில் பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவியை உயர்த்தும் வகையில், ‘அன்னபூர்ணா பந்தர்’ என்ற புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது.
முன்னதாக, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ‘லட்சுமிர் பந்தர்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. பழங்குடியினப் பெண்களுக்கு மாதம் ரூ.1,700 வழங்கப்பட்டு வந்தது.
தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, லட்சுமிர் பந்தர் திட்டத்திற்கு மாற்றாக ‘அன்னபூர்ணா பந்தர்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா, மாநில முதல்வர் Suvendu Adhikari தலைமையில் நடைபெற்றது.
திட்டத்தின் முதல் கட்டமாக, 28.5 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.3,000 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
