பாஜக முன்னாள் மாநில தலைவர் K. Annamalai, தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) டில்லியில் பிரதமர் Narendra Modiயை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலை அண்மையில் சென்னையிலிருந்து திடீரென டில்லி பயணம் மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக அங்கு தங்கி இருந்து, பாஜக மூத்த தலைவர்களுடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் B. L. Santhoshயை சந்தித்து தனது அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் தேசிய தலைவர் Nitin Nabinயை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் Amit Shahவை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். டில்லி பயணத்தை முடித்து அவர் நாளை தமிழகம் திரும்புகிறார்.
அண்ணாமலை தமிழகம் திரும்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
