சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 14 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, டி.ஜி. வினய் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சுந்தரவல்லி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலராகவும், லலிதா நிதித்துறை (செலவினம்) சிறப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கமல் கிஷோர் மற்றும் பிரசாந்த் ஆகியோர் நிதித்துறையின் இணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அழகுமீனா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராகவும், பூஜா குல்கர்னி மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை கமிஷனராகவும், அமுதவள்ளி ஊரக வளர்ச்சித்துறை கமிஷனராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
மேலும், பொன்னையா கல்லூரிக் கல்வி கமிஷனராகவும், கண்ணன் சர்க்கரைத்துறை கமிஷனராகவும், சந்திர சேகர் ஷகமுரி விவசாய சந்தை மற்றும் விவசாய வணிகத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்
தமிழக அரசின் உத்தரவின்படி பின்வரும் மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
- ஆகாஷ் – மதுரை
- பிரவீன் குமார் – நாகப்பட்டினம்
- வைத்தியநாதன் – தேனி
- சரவணன் – தர்மபுரி
- பிரதீப் – கன்னியாகுமரி
- பிரதிக் தயாள் – திருச்சி
- வந்தனா கார்க் – திருவண்ணாமலை
- பத்மஜா – கள்ளக்குறிச்சி
- பிரியா – ராணிப்பேட்டை
- மதுபாலன் – நாமக்கல்
- ஆனந்த் மோகன் – திருநெல்வேலி
- லீலா அலெக்ஸ் – வேலூர்
- ரேவதி – தஞ்சாவூர்
- வீரப்பன் – செங்கல்பட்டு
இதுதவிர, பல்வேறு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலசுப்ரமணியன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநராகவும், சதீஷ் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இயக்குநராகவும், மங்கத்ராம் சர்மா பவர்பின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கார்த்திகா சிஎம்டிஏ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஷஜீவனா தமிழக பாடநூல் மற்றும் கல்விச் சேவை கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், ரஞ்சித் சிங் தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
