சென்னை: தமிழகத்தில் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்வர் தயாள், நிர்வாகத்துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அருண், தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு, தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிர்வாக மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
