V. D. Satheesan, நேற்று காலை Guruvayur Temple கோவிலில் சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
காலை சுமார் 7 மணியளவில் கோவிலுக்கு வந்த முதல்வர் சதீசனை, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் Gopinath மற்றும் நிர்வாக அதிகாரி Arunkumar ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், கோவிலின் மூலவரான Guruvayurappanஐ வழிபட்ட சதீசன், தனது எடைக்கு நிகராக வெண்ணெய் வழங்கும் ‘துலாபாரம்’ வழிபாட்டை மேற்கொண்டார்.
இந்த நேர்த்திக்கடனுக்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian National Congress கட்சியைச் சேர்ந்த சதீசன், முதல்வராக பதவியேற்ற பிறகு குருவாயூர் கோவிலுக்கு வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தரிசனத்தை தொடர்ந்து, Anil Kumar மகனின் திருமண விழாவிலும் அவர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
