“சனாதனத்தை ஒழிப்பது லட்சியம் என்றால் தேர்தல் அறிக்கையில் கூறாதது ஏன்?” – விஹெச்பி கேள்வி
திருச்சி: “சனாதனத்தை ஒழிப்பது தான் திமுகவின் லட்சியம் என்றால், அதை தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை?” என Vishwa Hindu Parishad அகில பாரத இணை பொதுச்செயலர் Sthanumalayan கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
“சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் Udhayanidhi Stalin தெரிவித்த கருத்துகள் இந்து சமுதாயத்திற்கு எதிரானவை. சனாதன தர்மத்தை ஒழிப்பதே அவர்களின் நோக்கம் என்றால், திமுக தேர்தல் அறிக்கையில் அதைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரங்களிலும் இந்து சமுதாயத்திற்கு எதிராக ஏன் பேசவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “தி.மு.க ஆட்சிக்கு வராவிட்டால் யார் வர வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. அதனால் தான் திருக்குறள் வாசிக்க வேண்டிய சட்டசபையில் தற்போது பைபிள் வாசிப்பவர் சபாநாயகராக உள்ளார்” என்றும் அவர் கூறினார்.
சாதி ஒழிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், “திருமாவளவன் போன்றவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சாதியை ஒழிப்பதே சனாதனத்தை ஒழிப்பதாக சொன்னால், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் சாதி இல்லை என்று கூற முடியுமா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசு வெளியிட்ட கெஜட்டில் 420 சாதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கடந்த 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்களை மட்டும் கட்டுப்படுத்துவது சரியல்ல” என்றும் தெரிவித்தார்.
இந்து சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் திமுகவும், தவெகவும் ஒரே மாதிரியான அணுகுமுறையில் செயல்படுகின்றன என்றும் ஸ்தாணுமாலயன் விமர்சித்தார்.
