சென்னை: முதல்வர் Vijay தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், Vanniarasu மற்றும் Shajahan அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் 72 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆளுநர் R. N. Ravi பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஷாஜஹான், “இறைவன் மீது ஆணையிட்டு” உறுதிமொழி ஏற்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விசிக எம்எல்ஏ வன்னியரசு “உளமாற உறுதி கூறி” அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சமூக நீதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஷாஜஹான், தலைமைச் செயலகத்தில் தனது பொறுப்பை ஏற்கும் முன் இஸ்லாமிய மரபுப்படி துவா ஓதிய பிறகே நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
