குடகு: கர்நாடக மாநிலத்தில் யானைகள் மோதிக்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள துபேரே யானைகள் முகாம் அருகே, காவிரியாற்றில் வளர்ப்பு யானைகள் குளித்துக் கொண்டிருந்தன. இந்த காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரையில் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, “காஞ்சன்” மற்றும் “மார்த்தான்டா” என்ற பெயருடைய இரண்டு யானைகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றபோதிலும், அவை ஆக்ரோஷமாக சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின் போது “மார்த்தான்டா” யானை கீழே விழுந்தது. அப்போது அருகில் நின்றிருந்த சென்னையை சேர்ந்த துளசி (33) என்ற பெண் யானையின் அடியில் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து Eshwar Khandre இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
