புதுடில்லி: India Meteorological Department தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை மையம் முன்கூட்டியே கணித்திருந்தது.
அதன்படி, இன்று (மே 16) தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு அது முன்கூட்டியே ஆரம்பமாகியுள்ளது. இந்த பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Kerala மாநிலத்தில் இயல்பை விட சுமார் 6 நாட்கள் முன்பாகவே, அதாவது மே 26ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
